நிர்விகல்ப சமாதி
நிர்விகல்ப சமாதி என்பது அறிபவன் (பிரம்மம்) மற்றும் அறியப்படும் பொருள் (சீவன்) போன்ற வேறுபாடுகள் அகன்று இரண்டாவதற்ற பிரம்ம வடிவாகவே ஆகி பிரம்மத்துடன் ஒன்றி, ஒடுங்கியுள்ள மனநிலைதான் நிர்விகல்ப சமாதி என்று பதஞ்சலி முனிவர் விளக்கியுள்ளார். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை அசம்ப்ரஜ்ஞாத சமாதி என்றும் அழைக்கிறார் பதஞ்சலி முனிவர். இதில அறிபவன் (திருக்), அறியப்படும் பொருள் (திருஷ்யம்) போன்ற வேறுபாடுகள் அனைத்தும் கரைந்து போயிருக்கும். பிரம்மவஸ்து ஒன்று மட்டுமே அனுபவத்தில் இருக்கும்.[1] திருமூலரும் இதே கருத்தை (எட்டாம் தந்திரம்-21வது பாடல்),
- மரத்தை மறைத்தது மாமத யானை
- மரத்தில் மறைந்தது மாமத யானை
- பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
- பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே` என்று பாடியுள்ளார்.
இத்தகைய உயர்ந்த சமாதி நிலையை அடைவதற்கு, யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணம், தியானம், சமாதி எனும் எட்டு படிகளில் சாதனை செய்ய வேண்டும். இவற்றை இடைவிடாத பயிற்சி மேற்கொண்டால், நிர்விகல்ப சமாதி யின் மூலம் பிரம்ம அனுபவம் நேரடியாக உண்டாகும்.
எவ்வாறு உப்பானது தண்ணீரில் கரைந்து தன் வடிவத்தை இழந்து தண்ணீரின் வடிவத்தை ஏற்று தன் வடிவத்தை இழப்பது போல, இரண்டற்ற பிரம்மவஸ்துவின் (மெய்ப்பொருளின்) வடிவத்தை அடைந்த சீவனின் மனதின் வடிவமானது (எண்ணங்கள்/விருத்தி) காணப்படுவது இல்லை. இரண்டற்ற பரபிரம்மம் மட்டுமே உணரப்படுகிறது.
நிர்விகல்ப சமாதியில் மட்டுமே பிரம்ம தரிசனம் ஆகும் வரையிலும் சீவனிடனிருந்த சித்தவிருத்தியானது தானே மறைந்து, பிரம்மம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
எனவே அயர்ந்த உறக்க நிலையும் சமாதியும் ஒன்றுதானா எனும் ஐயத்திற்கு இடமில்லை. இந்த இரு நிலைகளுமே மனதின் எண்ணங்கள் தென்படுவதில்லை என்பது பொதுவாக இருப்பினும், நிர்விகல்ப சமாதியில் மனதின் எண்ணங்களானது உள்ளது. உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் இல்லை என்ப்தால் உறக்க நிலையை சமாதி நிலைக்கு ஒப்பிடக்கூடாது.
அயர்ந்த உறக்க நிலையிலும் அறிபவன் (பிரம்மம்), அறிவு, அறியப்படும் பொருள் என்னும் பகுப்புக்கள் இருப்பதில்லை. எண்ணங்கள் இருப்பதில்லை. எனவேதான் உறக்கநிலைக்கும், நிர்விகல்ப சமாதிக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்படுகிறது.
நிர்விகல்ப சமாதியில் சித்தவிருத்தி ஏற்படாமல் இருப்பதற்கு அது பிரம்மனின் வடிவத்தைப் பெற்றிருப்பதே காரணமாகும். உப்பு, நீரில் கரைந்து இருப்பதால் அது தென்படாமல் இருப்பினும் உப்பின் தன்மை நீரில் இருக்கதான் செய்கிறது. ஆனால், அயர்ந்த உறக்கநிலையில் மனதில் எண்ணங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அது இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். கிரகிக்கத் தக்க எந்தப் பொருளுமே அந்த நிலையில் இல்லாமலிருப்பதால் மனமானது தன்னுடைய காரணமான அறியாமை எனும் அஞ்ஞானத்தில் தற்காலிகமாக ஒடுங்கியிருக்கிறது.
பதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சூத்திரத்தில் (1. 10) அயர்ந்த உறக்கநிலையிலும் தமோ குணத்தைச் சார்ந்துள்ள எண்ணங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத் துணை
[தொகு]- பதஞ்சலி யோசூத்திரம் [1]
- வேதாந்த சாரம், நூலாசிரியர், சதானந்த யோகீசுவரர்
வெளி இணைப்புகள்
[தொகு]- பதஞ்சலி யோக சூத்திரத்தை தமிழில் கேட்க [2]